மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 115 பேர் மட்டக்களப்பு இலங்கை மின்சார சபை காரியாலய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸாரும் , மின்சார சபையினரும் ஒன்றிணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சட்டவிரோத மின்பாவனையாளர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர், வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பகுதிகளில் இந்த சுற்றிவளைப்பு தேடுதல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.