அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கோமாரி காட்டு பகுதியில் புதையல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.
விசேட அதிரடிப்படையினர் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காட்டுப் பகுதியை சுற்றி வளைத்து இவர்களை கைது செய்தனர்.இவர்களின் உடைமையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளன.