450 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு அம்பாறை மாவட்டத்திலேயே அதிக தொகை'





உள்ளூராட்சித் தேர்தலுக்காக நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நியமனப்பத்திரங்களில் 450 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.

301 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மார்ச் 17 இல் தேர்தல் இடம்பெறவுள்ளது. இச்சபைகளுக்கு 2047 நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 1597 நியமனப்பத்திரங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களால் 1597 வேட்புமனுக்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருகின்றன.

அம்பாறை மாவட்டத்திலேயே அதிகளவிலான நியமனப்பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 164 நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் 48 நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் 43
வேட்புமனுக்கள் சுயேச்சைக்குழுக்களுடையவை ஆகும்
Tags: , ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.