அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் நேற்று சனிக்கிழமை காலை வரை கடும் மழை பெய்துள்ளது.சில இடங்களில் கடும் காற்றும் வீசியுள்ளது.
இதனால் மீண்டும் பல இடங்களில் வெள்ளம் காணப்பட்டதுடன் வயல்களிலும் அருவி வெட்டும் வேலைகள் முற்றாகப்பாதிக்கப்பட்டுள்ளன.
இனிமேல் அருவிவெட்டும் வேலையைக் கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் 13.8 மில்லிமீற்றர் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்திலும் 3.7 மி.மீற்றர் மழை பெய்துள்ளதாகவும் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் கிழக்கில் மீண்டும் மழை பெய்யும் நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை முழுநாளும் மழை விட்டுவிட்டு பெய்துள்ளது.
வட,கிழக்கு பருவப்பெயர்ச்சிக் காலநிலை தொடர்வதால் கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் எனவும் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.