பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் மட்டக்களப்பு நீதிமன்றில் சரண்



மட்டக்களப்பில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நேற்று முன்தினம் சரணடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நீண்டகாலமாக பல கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் அண்மையில் அரசடிச் சந்தியில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையிட்டதைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையினூடாக ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இவர் ஊடாக மேற்கொண்ட விசாரணையின் மூலம் இக்குழுவில் மேலும் மூவர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்ததையடுத்து பொலிஸார் தேடியபோது மூவரும் தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஈச்சந்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி தம்பிராசா சாந்தகுமார் தெரிவித்தார்.
Tags: ,

About author

For news updates connect our facebook www.facebook.com/thirukkovil.