அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் வீட்டின் மீது நேற்று அதிகாலை இனந்தெரியாதோரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் வீட்டில் சிறுசேதம் ஏற்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாநகர சபை தேர்தலில் போட்டியிடும், அக்கரைப்பற்று உடையார் வீதியிலுள்ள எம்.முகமட் ரிஸாம் என்பணிரின் வீட்டின் மீதே நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இனம்தெரியாதோரினால் துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வீட்டின் யன்னல்கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் அவர் வீட்டில் இருந்தபோதும் அவருக்கு எதுவும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
